ADVERTISEMENT

இழிவானதும் மோசமானதும்

Published - January 11, 2023 11:04 am IST

ஒரு ஆளுநர் மரபிலிருந்து விலகியது, விரும்பத்தகாத பல நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது

விரும்பத்தகாத நிகழ்வுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் தங்களை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும். புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை, பலர் நடக்கும் என்று நினைத்த நாடகத்தை அரங்கேற்றியது. சில காலமாகவே சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளை திரு.ரவி சொல்லி வருகிறார். அரசு தன்னை ‘தமிழ்நாடு’ என்று அழைத்துக் கொள்ளக் கூடாது என்று சமீபத்தில் பொறுப்பற்ற முறையில் அவர் தெரிவித்த கருத்தும் மாநிலத்தின் அரசியல் ‘பிற்போக்குத்தனமானது’ என்று அவர் சொன்னதும் சட்டமன்றத்துக்கு உரையாற்ற வரும் முன்னர் பதற்றத்தை ஏற்படுத்தியது. திரு.ரவியின் அணுகுமுறையைப் பொறுத்தவரையில் துரதிருஷ்டவசமானது என்னவென்றால், திமுக ஆட்சியின் மீதான இந்த தாக்குதல் என்பது அவரை ஒரு முழுமையான பகுதியாகக் கொண்ட சட்டமன்றத்துக்குள்ளும் நுழைந்தது. இந்தப் பின்னணியில்தான், தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து சில பகுதிகளை தவிர்க்க திரு.ரவி முடிவு செய்தார். “திராவிட மாடல் ஆட்சி” பற்றிய குறிப்பும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை பாராட்டும் வார்த்தைகளும் உரையிலிருந்து விடுப்பட்டிருந்தன. தயாரிக்கப்பட்ட உரைகளிலிருந்து ஆளுநர்கள் விலகும் சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்திருந்தாலும், பிற மாநிலங்களைப் போலல்லாமல் இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து உடனடியான எதிர்வினை வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை பற்றிய அறிக்கை தவிர வேறொன்றும் இல்லை என்பதால் தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து ஆளுநர் விலகக் கூடாது என்பது அரசியல் சாசன மரபு. கடந்த காலங்களில் இந்த மரபிலிருந்து எப்போதாவது ஆளுநர்கள் விலகினாலும் பெரும்பாலான முதல்வர்கள் மோதலை தவிர்த்தார்கள். ஆனால் திரு.ஸ்டாலின் ஆளுநர் இருக்கும் போதே உடனடியாக பதிலடி தர முடிவு செய்தார். சட்டசபை ஆவணம் தயாரிக்கப்பட்ட உரையை மட்டுமே பிரதிபலிக்கும் என்றும் அந்த உரையை ஆற்றும் போது ஆளுநரின் உடனடியான சேர்க்கைகள் அல்லது விடுபடல்களை பிரதிபலிக்காது என்றும் தீர்மானம் இயற்றுவதன் மூலம் அந்த பதிலடி தரப்பட்டது.

ADVERTISEMENT

திரு.ஸ்டாலினின் தமிழ் உரையில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவுடன் திரு.ரவி வெளிநடப்பு செய்தார். தீர்மானம் இயற்றும்

நடவடிக்கையை அவமானமாக அவர் கருதியது போல தெரிந்தது. ஆளுநர் அப்படி எதிர்வினையாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனில், ஆளுநர் மரபிலிருந்து விலகுவதற்கு உடனடியாக எதிர்வினையும் மரபிலிருந்து ஒரு விலகல்தான் என்றாலும் அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான எந்த காரணமும் இல்லை. அரசியல் சாசனப் பொறுப்பு வகிப்பவர்களின் மோதல் மனப்பான்மை காரணமாக ஏற்படும் விளைவுகளை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டியிருக்கின்றன. அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவிப்பதை கைவிட்டு, மாநிலத்தின் அரசியல் உணர்வுகள் பற்றிய கவனத்துடன் இருந்தால் எதிர்கால மோதல்களை தவிர்க்கலாம். நீண்டகால நோக்கில் பார்த்தால், நாட்டின் அரசியலமைப்பு அடிப்படையில் ஆளுநரின் பங்கு பற்றிய ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. அப்படி செய்வதன் மூலம் ராஜ் பவனில் பதவியில் இருப்பவர்கள் தங்களது மேலாதிக்க உணர்வை கைவிட்டு, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது போன்ற தங்களது முக்கிய அரசியல் சாசன செயல்பாடுகளில் கவனம் செலுத்துவார்கள்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT