கருங்கடல் மீது இரண்டு ரஷ்ய போர் விமானங்களுக்கும் ஒரு அமெரிக்க ஆளில்லா விமானத்திற்கும் இடையிலான உயர் நகர்வுகளின் விளைவாக விளைவாக செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவின் எம்.க்யூ -9 ரீப்பர் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் யுக்ரெயின் போரின் ஆபத்துகளை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து முரண்பட்ட விளக்கங்களே தரப்படுகின்றன. அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன், ரஷ்யாவின் சுகோய்-27 ரக போர் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் கண்காணிப்பு ட்ரோனை இடைமறித்து, ட்ரோன் மீது எரிபொருளை கொட்டி, அதன் மீது மோதி அதை கீழே தள்ளியதாகச் சொல்கிறது. ஆனால் அமெரிக்க ஆளில்லா விமானம் கிரிமிய தீபகற்பத்தில் (யுக்ரெயின் அதன் போருக்கு அறிவிக்கப்பட்டது) அதன் “தற்காலிக வான்வெளியை” மீறியதைத் தொடர்ந்து அதன் ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும், அமெரிக்க வான்வழி வாகனம் “கூர்மையான நகர்வில்” “உயரத்தை இழந்தது” என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை எம்.க்யூ-9 பதிவு செய்திருக்கிறது. வீடியோ ரகசியமானது இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் உண்மையை அறிய உதவும். காரணம் எதுவாக இருந்தாலும், தனக்கு கடற்படை இருப்பு கூட இல்லாத கருங்கடலில் அமெரிக்கா ஒரு ஆளில்லா விமானத்தை இழந்திருப்பது, அணு சக்திகளைக் கொண்ட நாடுகள் மோதலுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதற்கான ஒரு தீவிரமான நினைவுறுத்தல். இரு தரப்பினரும் முதிர்ச்சியுடன் இந்த சூழலுக்கு எதிர்வினையாற்றினாலு, இந்த நெருக்கடியை தூண்டிய அடிப்படை நிலை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து யுக்ரெயினுக்கு மேம்பட்ட தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்கள் உட்பட 30 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியிருப்பதோடு ரஷ்யா மீது கடுமையான தடைகளையும் விதித்திருக்கிறது. போரில் நேரடியாக ஈடுபடவில்லை எனவும் யுக்ரெயின் அதன் பிராந்தியங்களை பாதுகாக்க உதவுவதாகவும்
அமெரிக்கா சொல்கிறது. ஆனால் ரஷ்யாவோ, மேற்குலகு கூட்டாக சேர்ந்து தன்நை அழிக்க முற்படுவதாக குற்றம் சாட்டுகிறது. ரஷ்யா அது எதிர்பார்த்த விரைவான வெற்றியை பெறத் தவறியிருக்கும் நிலையில் போர் நீண்டுகொண்டிருக்கிறது இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளும் முறிந்திருக்கின்றன.கடந்த மாதம், இரு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போர் கால ஆயுதக் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் கடைசி அம்சமான நியூ ஸ்டார்ட் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா இடைநிறுத்தியது. தொடர்ந்து மோதல் நடந்து கொண்டிருக்கும் போது பரஸ்பர நம்பிக்கையின்மையை தீவிரப்படுத்திக்கொண்டிருப்பது, வல்லரசு போட்டிகளில் பேரழிவுக்கான சரியான பாதை. ரஷ்யாவுடன் நேரடி மோதல் இருக்காது என்று பைடன் அரசு தெளிவாகச் சொன்னாலும், பொறுப்பற்ற மற்றும் அதிக ஆபத்தான நகர்வுகள் அல்லது விபத்துகள். பெண்டகன் சொல்வதைப் போல “தவறான கணக்கீடு மற்றும் திட்டமிடப்படாத விரிவாக்கத்துக்கு” இட்டுச் செல்லும். வெவ்வேறான தளங்களில் அவர்கள் இயங்கும் போது நடு வானில் ஏற்படக்கூடிய மோதல்களை தவிர்க்க, அமெரிக்காவும் ரஷ்யாவும் விமான ஒருங்கிணைப்புக்கான நேரடி தொடர்பு வசதியை வைத்திருக்கின்றன. கருங்கடல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க யுக்ரெயின் மோதலிலும் அந்த பொறிமுறையை அவர்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இப்போதிருக்கும் மிகப்பெரிய சவால், இருதரப்பு உறவுகளின் நிலை மோசமடைவதை தவிர்ப்பதுதான். பனிப்போரின் முதல் இருபதாண்டுகளில் நிலவிய இருதரப்பு பகையை இது நினைவுப்படுத்துகிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தங்களுக்குள் ஒரு நிலைத்தன்மையை அது யுக்ரெயின் போரையும் முடிவுக்கு கொண்டு வர உதவும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - March 17, 2023 11:16 am IST